தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிப் பருவத்திலிருந்தே சாதிக்க வேண்டும்

பள்ளிப் பருவத்திலிருந்தே சாதிக்க வேண்டும்

பள்ளிப் பருவத்திலிருந்தே சாதிக்க வேண்டும்


UPDATED : அக் 27, 2011 12:00 AM

ADDED : அக் 27, 2011 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2011 12:00 AM ADDED : அக் 27, 2011 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : "ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமானால் மாணவ, மாணவியர் பள்ளிப் பருவத்திலிருந்தே சாதிக்க வேண்டும்" என, ஏ.டி.ஜி.பி., (நிர்வாகம்) ராஜேந்திரன் பேசினார்.

நேரு விளையாட்டரங்கில், சேத்துப்பட்டு கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி சார்பில், தென் சென்னை கல்வி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தடகளக் கூட்டமைப்பின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

போட்டியை, ஏ.டி.ஜி.பி., (நிர்வாகம்) ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., துவக்கி வைத்தார். முன்னதாக நடந்த மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ராஜேந்திரன் பேசும்போது, "ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமானால், மாணவ, மாணவியர் பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவருக்கு, தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் வெல்ல, மாணவ, மாணவியரை வாழ்த்துகிறேன்" என்றார்.

விழாவில், தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டிகளில், ஐம்பதுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us