தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் மாலை 4.30க்குள் முடிய வேண்டும் என கோரிக்கை

பள்ளிகள் மாலை 4.30க்குள் முடிய வேண்டும் என கோரிக்கை

பள்ளிகள் மாலை 4.30க்குள் முடிய வேண்டும் என கோரிக்கை


UPDATED : அக் 27, 2011 12:00 AM

ADDED : அக் 27, 2011 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2011 12:00 AM ADDED : அக் 27, 2011 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தை சரிகட்டும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

அதாவது, வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 35 நிமிடங்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அதுவும் அந்தந்த பகுதிகளுக்குஏற்ப நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அட்டவணை கொடுக்கப்பட்டது.

இதில் சில பள்ளிகளில் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்படியாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளும், ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். காட்டுப்பாதை வழியாக நடந்து செல்லும் மாணவிகளுக்கோ, ஆசிரியைகளுக்கோ பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.

மேலும், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் அந்த நேரங்களில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருப்பதால் மாணவ, மாணவியர் வீடுகளுக்குப் பாய்ச் சேர கால தாமதமும், பாதுகாப்பின்மையும் ஏற்பட்டுவிடுகிறது.

இதையடுத்து மாணவிகளும், ஆசிரியைகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை மனுவில், பள்ளிகள் மாலை 5 மணி வரை இயங்குவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள். மழை காலம் என்பதால் மாலை 5 மணிக்கே பகல் பொழுது முடிந்து விடுகிறது. வீட்டிற்கு செல்வதற்குள் முழுவதுமாக இருட்டி விடுவதால், கிராமப்புற மாணவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே, கிராமப்புற மாணவிகளும், ஆசிரியைகளும் பாதுகாப்பாக வீடு போய் சேரும் வகையில் மாலை 4.30 மணிக்குள் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகளை முடிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us