தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வர்களுக்கு அடையாள அட்டை அவசியம்

கேட் தேர்வர்களுக்கு அடையாள அட்டை அவசியம்

கேட் தேர்வர்களுக்கு அடையாள அட்டை அவசியம்


UPDATED : அக் 27, 2011 12:00 AM

ADDED : அக் 27, 2011 03:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2011 12:00 AM ADDED : அக் 27, 2011 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேட் தேர்வெழுத வரும் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று தேர்வு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஐஎம்-அளிக்கும் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நடத்தப்படும் கேட் தேர்வு அக்டோபர் மாதம் 22ம் தேதி துவங்கி நவம்பர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தேர்வு எழுத வரும் மாணவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நிச்சயம் கொண்டு வர வேண்டும். கல்லூரி மாணவர் அடையாள அட்டையாகவோ அல்லது வாக்காளர் அட்டையாகவோ இருக்கலாம். அதோடு, ஏடிஎம் டெபிட், கிரடிட் கார்டுகளையும் பெயர் சான்றுக்காக கொண்டு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய அடையாளச் சான்றுகள் இல்லாமல் தேர்வெழுத வரும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியாது. ஒரு மாணவரின் அடையாளச் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்படின், அவரது புகைப்படத்துடன் கூடிய சாட்சிச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டியது அவசியமாகும் என்று தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

22ம் தேதி துவங்கிய கேட் தேர்வு, இந்தியாவில் மட்டும் 33 நகரங்களில் 78 மையங்களில் நடைபெற்று வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us