UPDATED : அக் 28, 2011 12:00 AM
ADDED : அக் 28, 2011 10:58 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி
தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமியுடன் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த வல்லுனர்களை கொண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகள் எளிய நடையில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
விருத்தாசலத்தில் 29ம் தேதி சனிக்கிழமையன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெயித்துகாட்டுவோம் நிகழ்ச்சி நடக்கிறது. பஸ் நிலையம் பின்புறம் ஆலடி ரோட்டில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. மதியம் வரை நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் மாணவர்களை வீட்டில் பெற்றோர்கள் எப்படி தயார்படுத்த வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்க உள்ளதால் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். எனவே பத்தாம் வகுப்பு பொது தேர்வை எதிர் நோக்கியுள்ள விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பயனடையலாம்.
