தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ்2 தேர்வுக் கட்டணம் செலுத்த 31ம் தேதி கடைசி நாள்

பிளஸ்2 தேர்வுக் கட்டணம் செலுத்த 31ம் தேதி கடைசி நாள்

பிளஸ்2 தேர்வுக் கட்டணம் செலுத்த 31ம் தேதி கடைசி நாள்


UPDATED : அக் 28, 2011 12:00 AM

ADDED : அக் 28, 2011 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2011 12:00 AM ADDED : அக் 28, 2011 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கல்வியாண்டில் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி, நிதி உதவி நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சிறப்பு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர் தமிழ் வழியில் படிப்பவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஏழை மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

செய்முறை தேர்வு கொண்ட மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.255ம், செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்புக்கு ரூ.175ம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் சேர்த்து ஒரு மாணவர் ரூ.300ஐ செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை கருவூலத்தில் செலுத்த வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us