தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு பல்கலை துவங்குவது சுலபமா?

வெளிநாட்டு பல்கலை துவங்குவது சுலபமா?

வெளிநாட்டு பல்கலை துவங்குவது சுலபமா?


UPDATED : அக் 29, 2011 12:00 AM

ADDED : அக் 29, 2011 12:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2011 12:00 AM ADDED : அக் 29, 2011 12:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் கிளைகளை தொடங்குவதற்கான சட்ட மசோதவை பார்லிமென்ட்டில் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கிளைகளை அவ்வளவு எளிதாக தொடங்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

சமீபத்தில், அமெரிக்காவில் டிரிபோலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில், கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது போன்ற தரம் குறைந்த மற்றும் போலி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை தொடங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

இந்தியா, அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கு விருப்பமாக இருக்கிறது என்பதற்காக அந்த பல்கலைக்கழகங்களின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்பது அர்த்தமில்லை. இந்தியாவில் கிளைகளை தொடங்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வித்துறையில் குறைந்தது 20 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us