தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மண்டல அறிவியல் மையத்திற்கான பங்கை தந்தது தமிழக அரசு

மண்டல அறிவியல் மையத்திற்கான பங்கை தந்தது தமிழக அரசு

மண்டல அறிவியல் மையத்திற்கான பங்கை தந்தது தமிழக அரசு


UPDATED : அக் 30, 2011 12:00 AM

ADDED : அக் 30, 2011 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2011 12:00 AM ADDED : அக் 30, 2011 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் மண்டல அறிவியல் மையம் அமைப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதால், தன் பங்காக ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கோவையில், 2008, ஆக., மாதம், மண்டல அறிவியல் மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இதற்காக ஆகும் செலவை, மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான கவுன்சிலின் இயக்குனர், தமிழக அறிவியல் மைய இயக்குனருக்கு கடிதம் எழுதினார். அதில், இம்மையம் அமைக்க, 6.50 கோடி ரூபாய் செலவாகும் என, ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 8.50 கோடி ரூபாயாக செலவுத் தொகை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தன் பங்கான ஒரு கோடி ரூபாயை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பலவற்றுக்கு நிதி... : இதுதவிர, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அறிவியல் திருவிழா நடத்த, 15 லட்சம் ரூபாயும், சென்னையில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கை நவீனப்படுத்த, 15 லட்சம் ரூபாயும், இம்மையத்தின் மேற்கு பகுதியில், பாதுகாப்பு சுவர் கட்ட, 15 லட்சம் ரூபாயும், கல்லூரி அறிவியல் ஆசிரியர்களுக்கு, ஆராய்ச்சிகள் பற்றிய பயிற்சி முகாம் நடத்த, ஐந்து லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறையில், பர்கூர் இன்ஜினியரிங் கல்லூரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுக்கு, எட்டு பரிசோதனை கூடங்கள் அமைக்க, 48 லட்சம் ரூபாயும், ஐந்து அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில், 20 கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 20 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி கல்வி இயக்குனரகம் மற்றும் ஆறு இணை இயக்குனர் அலுவலகங்களில் கணினி வசதி மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் வாங்க, 19.60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 23 அரசு கல்லூரிகளில் கணினி வசதியை மேற்படுத்த, 3 கோடியே, 19 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us