தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரத்தை புதுப்பிக்காத காமராஜர் பல்கலைக்கழகம்

அங்கீகாரத்தை புதுப்பிக்காத காமராஜர் பல்கலைக்கழகம்

அங்கீகாரத்தை புதுப்பிக்காத காமராஜர் பல்கலைக்கழகம்


UPDATED : அக் 30, 2011 12:00 AM

ADDED : அக் 30, 2011 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2011 12:00 AM ADDED : அக் 30, 2011 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் தர மதிப்பீட்டிற்காக வழங்கப்பட்ட, "நாக்" அங்கீகார காலம் முடிந்துள்ள நிலையில், அதற்காக விண்ணப்பிக்க, துணைவேந்தர் போன்ற முக்கிய பொறுப்புகளில் நிர்வாகிகள் இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மே மூன்றாவது வாரத்தில், "நாக்" குழுவினர் பல்கலையை ஆய்வு செய்தனர். அவர்களின் மதிப்பீட்டில் பல்கலை 89 புள்ளிகள் பெற்றது. இதன் அடிப்படையில் பல்கலைக்கு, "நாக்" அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒரு முறை "நாக்" அந்தஸ்து வழங்கப்பட்டால், அதன் அங்கீகாரம் ஐந்தாண்டுகள் உண்டு. மதுரை காமராஜ் பல்கலையின் இந்த அங்கீகாரம் ஜூனில் முடிவடைந்தது. அதன் பின் இதை புதுப்பித்து, தொடர்வதற்காக பல்கலையில் இருந்து விண்ணப்பிக்கவில்லை.

"நாக்" இணையதளத்தில் அங்கீகாரம் இல்லாத பல்கலைகளின் பட்டியலில் தற்போது, மதுரை காமராஜ் பல்கலையும் இடம் பெற்றுள்ளது. அங்கீகார காலம் முடிவடைந்த பின்னும், பல்கலை தொடர்பான தகவல் பரிமாற்றங்களில், "நாக்" அங்கீகாரத்தைக் குறிப்பிடுவது தவறு என, இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர், சிறப்பு அலுவலர், டீன் பதவிகள் காலியாக உள்ளன. பதிவாளர், கூடுதல் தேர்வாணையர் பதவிகளும் பொறுப்பு பதவிகளாக உள்ளன. இவ்வாறு பல்கலையை நிர்வகிக்கக் கூடிய முக்கிய பதவிகளில் பொறுப்பாளர்கள் இல்லாததால், "நாக்" அங்கீகாரத்தைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு, உடனடியாக விண்ணப்பித்தாலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். பல்கலை தர மதிப்பீட்டை இழந்து நிற்கும் நிலையை மாற்றுவதற்கு, காலிப் பணியிடங்களை காலதாமதமின்றி நிரப்புவது அவசியம்.

புதிய முடிவுகள் என்ன? : "அடுத்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு படிப்பவர்கள், ஆங்கில வழியிலேயே தேர்வுகளை எழுத வேண்டும். பி.எச்டி., - எம்.பில்., படிப்புகளுக்கு, கல்லூரி நிர்வாகத்திடம் பல்கலை வசூலிக்கும் தொடர் கட்டணம் ரத்து, ஒரு பாடப் பிரிவில் 70க்கும் அதிகமான மாணவர்களை சேர்க்கக் கூடாது&' என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us