தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமதியின்றி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை

அனுமதியின்றி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை

அனுமதியின்றி இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை


UPDATED : அக் 31, 2011 12:00 AM

ADDED : அக் 31, 2011 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2011 12:00 AM ADDED : அக் 31, 2011 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெற்றோர்கள் தொடர்ந்த மனுவில், செட்டிநாடு ஏ பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவ சேர்க்கையின்போது ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்த பிறகே அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்குவதும் தெரிய வந்தது.

அங்கீகாரம் பெறாமல் இயங்கும் இந்த பள்ளிகளை தடுக்க வேண்டும். எங்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். பால்வசந்தகுமார், தமிழகத்தில் தொடங்கப்படும் எந்தவொரு பள்ளிக்கும் அரசு அனுமதியும், அங்கீகாரமும் வேண்டும். அனுமதியின்றி பள்ளிகள் தொடங்க அனுமதித்தால், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும்.

அனுமதியின்றி தொடங்கப்பட்டுவிட்டாலும், அதன்பிறகாவது அரசு அனுமதியையும், அங்கீகாரத்தையும் பள்ளிகள் பெற வேண்டும்.

செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு கட்டண முறைப்படுத்தும் சட்டப்படி, கட்டண நிர்ணயக் குழு எந்தக் கட்டணத்தையும் நிர்ணயிக்கவில்லை.

இந்த 36 பள்ளிகள் மீது கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் 4 வாரங்களுக்குள் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை இந்தப் பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us