புதிய தேர்வு முறை : மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய தேர்வு முறை : மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 01, 2011 12:00 AM
ADDED : நவ 01, 2011 11:17 AM
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மருத்துவப் படிப்பிற்கு அமல்படுத்திய புதிய தேர்வு முறையைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் பழைய தேர்வு முறையை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தேர்வு முறையால் கடந்த ஆண்டு தேர்வு எழுதிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 1300 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
முதலாமாண்டில் தோல்வி அடைந்தால் இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் புதிய தேர்வு முறையை மாற்ற வேண்டும், முதலாம் ஆண்டில் பெயிலானால், இரண்டாவது ஆண்டில் படித்துக் கொண்டே பெயிலான பாடங்களை எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.
