ராணுவத்தில் சிப்பாய், எழுத்தர், நர்சிங் உதவியாளர் பணி
ராணுவத்தில் சிப்பாய், எழுத்தர், நர்சிங் உதவியாளர் பணி
UPDATED : நவ 01, 2011 12:00 AM
ADDED : நவ 01, 2011 12:43 PM
இந்திய ராணுவத்தில் சிப்பாய், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு ஆவடியில் நவம்பர் 15ம் தேதியில் இருந்து ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலிஸ் பயிற்சி மையத்தில் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். சிப்பாய் (தொழில்நுட்பம்) பணிக்கு பிளஸ்2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். நர்சிங் உதவியாளர் பதவிக்கு உயிரியல் பாடம் படித்திருக்க வேண்டும். சிப்பாய் (பொது) பதவிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சிப்பாய் (டிரேட்மேன்) பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதர டிரேட்மேன் பதவிகளுக்கு 10ம் வகுப்பு முடித்துவிட்ட சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) பணிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி தேவை. கலை, அறிவியல், வணிகம் அனைத்து பிரிவினரும் தகுதி உடையவராவர் என்று கூறப்பட்டுள்ளது.
