தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக யோகா போட்டி : தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்

உலக யோகா போட்டி : தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்

உலக யோகா போட்டி : தமிழக மாணவிக்கு தங்கப்பதக்கம்


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர் : இலங்கையில் நடந்த உலக யோகா போட்டியில், ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவி யாமினி தேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் மெட்ரிக்., பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். எல்.கே.ஜி., முதலே யோகா கற்று வரும் யாமினி தேவி, மாவட்ட அளவிலான போட்டிகளில் பல பரிசுகளும், மாநில அளவிலான போட்டிகளில், 5 முறை கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த மாதம் இலங்கையில் நடந்த உலக அளவிலான, யோகா சாம்பியன் ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

"முதல் முறையாக ஜப்பான், இலங்கை, சீனா உட்பட பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் நானும் பங்கேற்று, முதல் பரிசை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் யாமினி தேவி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us