வணிகவியல் ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வி அறிவு பயிற்சி
வணிகவியல் ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வி அறிவு பயிற்சி
UPDATED : நவ 02, 2011 12:00 AM
ADDED : நவ 02, 2011 12:13 PM
அ நிறம் | அளவு
தேனி : வணிகவியல் ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வி அறிவு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ்-1ல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் வணிகவியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், பிளஸ்-1 வணிகவியல் மற்றும் பொருளியல் முதுகலை ஆசிரியர்களுக்கு நிதி சார் கல்வி அறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது. 925 பள்ளிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆசிரியருக்கு இப்பயிற்சி தரப்படுகிறது. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் நிதி தொடர்பான கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க உள்ளனர்.
