தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்

குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்

குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்


UPDATED : நவ 03, 2011 12:00 AM

ADDED : நவ 03, 2011 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2011 12:00 AM ADDED : நவ 03, 2011 06:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், இப்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.200 கோடி செலவில் நூலகம் கட்டி முடிக்ப்பட்டது. தரை தளத்துடன் கூடிய 9 தளங்களைக் கொண்டதாக கட்டடம் அமைந்தது. இந்த நூலகத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் கூடிய இந்த நூலகத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்த நூலகத்தை இடம்மாற்றி, அந்த இடத்தில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெறும் இந்த நூலகத்தை இடம் மாற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முக்கிய நகர்ப்பகுதியில் நல்ல கட்டட வசதியுடன் ஒரு நூலகம் இயங்குவது என்பது படித்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வரப்பிரசாதமாகும். இவ்விடத்தை மாற்றுவதால் நூலகத்தை பயன்படுத்துபவர்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us