தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மடிக் கணினியில் கல்லூரி பாடத்திட்டங்கள்

மடிக் கணினியில் கல்லூரி பாடத்திட்டங்கள்

மடிக் கணினியில் கல்லூரி பாடத்திட்டங்கள்


UPDATED : நவ 03, 2011 12:00 AM

ADDED : நவ 03, 2011 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2011 12:00 AM ADDED : நவ 03, 2011 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி அருகே நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர், கல்வி துறையில் இப்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் என்ன கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அந்த கல்வியை இனாம்குளத்தூரில் உள்ள இந்த கல்லூரியிலும் மாணவர்கள் பெற முடியும். நவீன கல்வியை பெறுவதற்கு வசதியாக மாணவர்கள் தங்களது கணினி அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும். தேசிய அறிவுசார் இணைய தளத்தைப் பயன்படுத்தி பொது அறிவினை வளர்க்க வேண்டும்.

கணினி அறிவியல் படித்தால் பிபிஓ கம்பெனிகளில் வேலை வாயப்பு பெற முடியும். அதன் மூலம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க முடியும். நமது பொருளாதாரம் இன்று இவற்றின் கையில் தான் உள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக் கணினியில் கல்லூரி பாடங்களையும் பதிவு செய்து கொடுக்க உள்ளோம். எல்லா பாடங்களும் இல்லை என்றாலும் முக்கியமான சில பாடங்கள் மட்டும் பதிவு செய்யப்படும். தமிழக அரசு அளிக்கும் இந்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் நன்றாக படித்து நேர்மையான முறையில் சம்பாதித்து நல்ல முறையில் செலவிடும் வகையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us