தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூலக இடமாற்றத்திற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

நூலக இடமாற்றத்திற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

நூலக இடமாற்றத்திற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை


UPDATED : நவ 04, 2011 12:00 AM

ADDED : நவ 04, 2011 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2011 12:00 AM ADDED : நவ 04, 2011 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதற்கான காரணத்தை 6 வாரகாலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் அருகே 200 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆட்சியில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. தெற்காசியாவிலேயே பெரிய, லட்சக்கணக்கானப் புத்தகங்களைக் கொண்ட மற்றும் பலவிதமான வசதிகளைக் கொண்ட, பலரின் பாராட்டைப் பெற்ற, அண்ணா பல்கலை மற்றும் ஐ.ஐ.டி. போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்த இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழறிஞர், வாசகர்கள், மாணவ சமூகத்தினர், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறான அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இடைக்காலத் தடை

மனுவை விசாரித்த நீதிபதிகள், நவீன வசதி கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். குழந்தைகள் மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்க வில்லையா? என்றும் அவர்கள் வழக்கறிஞரிடம் கேட்டனர். இதனையடுத்து நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

அந்த நோட்டீசிற்கு 6 வார காலத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் உத்தரவு வரும்வரை இந்த இடைக்கால தடை உத்தரவு செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us