ஜெயித்துக் காட்டுவோம் : செஞ்சி, காஞ்சியில் இன்று நடக்கிறது
ஜெயித்துக் காட்டுவோம் : செஞ்சி, காஞ்சியில் இன்று நடக்கிறது
UPDATED : நவ 05, 2011 12:00 AM
ADDED : நவ 05, 2011 11:05 AM
தினமலர் நாளிதழ் டி.வி. ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதவும், அதிக மதிப்பெண் பெறவும் ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா நடந்து வருகிறது.
அதேபோல் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா 5ம் தேதியன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்காக செஞ்சி காந்தி பஜாரில் உள்ள வீராசாமி நயினார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
காஞ்சிபுரம் ரயில்வே ரோடில் உள்ள, அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்திலும் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சியும், பகல் 12.30 மணிக்கு, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் துவங்கும்.
பொதுத்தேர்வை பயமின்றி எழுதுவது குறித்தும், கேள்விக்கான விடைகளை எழுதும் முறைகள், தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், முக்கிய குறிப்புகள், பாட வாரியாக ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் புத்தகங்கள், முக்கிய வினா-விடை, மாணவர் உடல் நலம், மன நலம் மற்றும் மாணவியர்களின் உடல் நலம் குறித்த புத்தகம், நோட்டு, பேனா வழங்கப்படும். இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
6ம் தேதியன்று உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், காலை 8.30 மணிக்கு, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெறும்.
