UPDATED : நவ 05, 2011 12:00 AM
ADDED : நவ 05, 2011 10:51 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக, யூனியன் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்குதல், ஏற்கனவே விண்ணப்பம் பெற்றவர்களிடம் இருந்து பூர்த்தி செய்த விண்ணப்பம் பெறுதல் போன்ற பணி நடக்கிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், வங்கி கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றுகளை பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்தவர்கள், தற்போது சுயஉறுதி ஆவணம் சமர்ப்பித்து, எஞ்சிய காலங்களுக்கான உதவித்தொகை பெறலாம்.
நவ., 3ம் தேதி காலை அம்மாபேட்டை யூனியன் அலுவலம், மதியம் பவானி, நேற்று காலை சத்தி, மதியம் பவானிசாகரில் முகாம் நடந்தது. 8ம் தேதி தாளவாடி, 10ம் தேதி காலை பெருந்துறை, மதியம் சென்னிமலையிலும், 11ம் தேதி காலை கோபியிலும், மதியம் நம்பியூரிலும் முகாம் நடக்கிறது.
