தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவ, மாணவியர் புதுமுயற்சி

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவ, மாணவியர் புதுமுயற்சி

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவ, மாணவியர் புதுமுயற்சி


UPDATED : நவ 06, 2011 12:00 AM

ADDED : நவ 06, 2011 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2011 12:00 AM ADDED : நவ 06, 2011 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பழமையான வாழ்க்கை முறையை மீட்டெடுக்கும் வகையில், கல்வி செயல் திட்டத்தை, பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவ, மாணவியர், பல வகைகளில் விளக்கியதும், செயலாகக் காட்டியதும் வியக்கும் வகையில் அமைந்தது.

காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, வாழ்க்கை முறை, உணவு, பழக்க வழக்கங்களில் மாறி வருகிறோம். ஆனால், பழங்காலத்தின் வாழ்க்கை முறை, அப்போதுள்ள உணவு வகைகள், தொழில்கள், திருமணச் சடங்குகள், விளையாட்டு, இசை, கணிதம் உள்ளிட்ட பல விஷயங்களை, நாம், இன்று சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். இந்த விஷயத்தை, தங்களது கல்வி செயல் திட்டக் கண்காட்சியின் மையக் கருத்தாக, இந்த ஆண்டு கையில் எடுத்தவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவ, மாணவியர். கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, மூன்று நாட்கள் அப்பள்ளியின் துறைரீதியான மாணவ, மாணவியர், தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில், கலை நிகழ்ச்சிகள், கணினி வழியில் புராஜக்ட்களை சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். கலை நிகழ்ச்சிகளின் மூலம், பழங்கால இசை, திருமணச் சடங்குகள், விளையாட்டு, கணிதம் உள்ளிட்டவற்றின் சிறப்பு அம்சங்களை, கண்முன்னே கொண்டு வந்தனர்.

நிர்வாகத் திறமையின் அவசியம் குறித்து விளக்கும் வகையில், மாணவிகள் பலர், பழங்காலத்தில் பழக்கத்தில் இருந்த கைத் தொழில்களைச் செய்து காட்டினர். நிறைவு நாள் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஒய்.ஜி.பார்த்தசாரதி, துணை இயக்குனர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் வள்ளி அருணாசலம், துணை முதல்வர் ஷியாமளா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் வெளிவந்த தின கண்ணாடி

மாணவர்களின் திறமையின் சிறப்பு அம்சமாக, கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களும், "தின கண்ணாடி" என்ற நாளிதழை, மாணவ, மாணவியரே பிரசுரம் செய்தனர். இதற்காக, அவர்கள் பள்ளியின் கண்காட்சியில், அன்றைய தினம் நடக்கும் நிகழ்ச்சிகளைச் செய்தியாகவும், படங்களாகவும் சேகரித்து, அதனை பிரசுரம் செய்தனர். இதேபோல, விஷுவல் மீடியாவை விளக்கும் வகையில், சிறப்பு விருந்தினர்களின் வருகையையும், அவர்களது பேச்சையும், உடனடியாக தங்களது கம்ப்யூட்டரில் பதிவுசெய்து, அதனை, "டிவி" யில் வெளியிட்டனர். இந்த உடனடி எடிட்டிங் பணியில், ஈஸ்வர் என்ற மாணவர் அசத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us