UPDATED : நவ 07, 2011 12:00 AM
ADDED : நவ 07, 2011 11:58 AM
வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடியில், நிதி சார் கல்வி அறிவு திட்ட பயிற்சி முகாம் நடந்தது.தமிழக அரசும், தேசிய பங்கு சந்தை நிறுவனமும் இணைந்து நிதி சார்ந்த கல்வி அறிவு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில், 2011- 12ம் ஆண்டு முதல் முன்னோடி திட்டம் தயாரித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தி வருகின்றது. வேலூர் மாவட்டத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பாட திட்டம் குறித்த பயிற்சி கையேட்டை வெளியிட்டார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, விரிவுரையாளர் மது சூதனன், தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
