அண்ணா பல்கலையில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி சேர்க்கை
அண்ணா பல்கலையில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி சேர்க்கை
UPDATED : நவ 07, 2011 12:00 AM
ADDED : நவ 07, 2011 03:45 PM
இரண்டு ஆண்டுகள் கொண்ட எம்.பி.ஏ., எம்.எஸ்சி., 3 ஆண்டுகள் கொண்ட எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் தொலைதூரக் கல்வி மையத்தில் விண்ணப்பத்தை ரூ.650க்கான டிடி அளித்துப் பெற்றுக் கொள்ளலாம். தபாலில் பெற விரும்புபவர்கள், சுய முகவரியிட்ட உரையுடன், ரூ.700க்கான டிடியை டிசம்பர் மாதம் 24ம் தேதிக்குள் அனுப்பினால் தபாலில் விண்ணப்பத்தை பெறலாம்.
மேலும், மதுரையில் கே.எல்.என். பொறியியல் கல்லூரி, திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி, வேலூரில் உள்ள சின்னுஸ் பென்டெக் கம்ப்யூட்டர் சொல்யூஷன் ஆகியவற்றில் இருந்தும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாக பல்கலையில் சமர்ப்பித்து உடனடியாக தேர்வு அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். தபாலிலும் விண்ணப்பத்தை அனுப்பலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் 09.01.2012.
நுழைவுத் தேர்வு 29.01.2012ம் தேதி நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 29ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
எம்.சி.ஏ., எம்.எஸ்சி படிப்புகள் சென்னை மையத்தில் மட்டுமே வழங்கப்படும். எம்.எஸ்சி. (ஐடி) படிப்பு படிக்க விரும்புவோர் நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை.
நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். அண்ணா பல்கலையின் தொலைதூரக் கல்வி மையத்தில் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளன.
மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலையின் www.annauniv.edu/cde இணையதளத்தை பார்க்கவும்.
