வி.ஏ.ஓ.க்களை மாவட்ட ரீதியாக ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்
வி.ஏ.ஓ.க்களை மாவட்ட ரீதியாக ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்
UPDATED : நவ 09, 2011 12:00 AM
ADDED : நவ 09, 2011 12:10 PM
அ நிறம் | அளவு
கடந்த பிப்ரவரி மாதம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்கான தேர்வு நடைபெற்றது. 3,484 காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்த தேர்வை 7,00,076 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.ஏ.ஓ. தேர்வாளர்களை அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டு விதி மற்றும் பதவி முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒதுக்கீ செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைந்து மாவட்டங்களுக்கு தெரிவுப்பட்டியல் அனுப்பி வைக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.
