தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : நவ 10, 2011 12:00 AM

ADDED : நவ 10, 2011 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2011 12:00 AM ADDED : நவ 10, 2011 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறுவதற்கும், பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட கல்வி துறை சார்பில் புதிய முயற்சி எடுத்துள்ளனர்.

இதன்படி மாநிலத்தில் முதன்முறையாக ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரண்டு மையங்கள் தேர்வு செய்து, அங்கு சமச்சீர் புதிய பாடத்திட்டத்தின் கீழ், எளிய முறையில் பாடம் கற்பித்தலுக்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் உரைநடை, செய்யுள், இலக்கணம் மற்றும் துணைப்பாடம் ஆகியவற்றை மாணவர்களுக்கு எளியமுறையில் கற்றுத்தருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கணிதம் பாடத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி அணிகள், ஆயத்துளை வணிகக் கணிதம் மற்றும் வடிவியல் ஆகிய தலைப்புகளில் எளிமையாக போதிப்பது குறித்து விளக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ""மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைப்பதற்கு முதலில் ஆசிரியர்களை தயார் செய்கிறோம். இதற்காக பயிற்சி வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடங்களை கற்றுத்தருவதன் மூலம் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us