தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய தேர்வு முறை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொருந்தாது

புதிய தேர்வு முறை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொருந்தாது

புதிய தேர்வு முறை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொருந்தாது


UPDATED : நவ 10, 2011 12:00 AM

ADDED : நவ 10, 2011 02:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2011 12:00 AM ADDED : நவ 10, 2011 02:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இந்த பதிலால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த முதலாமாண்டு மாணவர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தேர்வு முறையை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, மனு மீது பதில் அளிக்க எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்கலை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நர்மதா சம்பத், ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய விதிமுறையை அமல்படுத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுரை வழங்கியது. தமிழக அரசின் ஆலோசனையை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. எனவே ஆகஸ்ட மாதம் நடந்த தேர்வுக்கு மட்டும் புதிய தேர்வு விதிமுறைகளை அமல்படுத்த தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

பல்கலை தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதால எங்களது வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த பிரச்சினையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிர்வாகக் குழு 8ம் தேதி எடுத்த தீர்மானத்தின் நகல் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட மாதம் நடந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வில் புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அளித்த அறிவுரையின்படி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

எனவே, தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதாக மாணவர்கள் கூறினர். எனவே அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இதில் பல மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அந்த வகுப்புகளுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் வந்ததாக பல்கலைக்கழகம் கருத வேண்டும் என்று கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us