UPDATED : நவ 10, 2011 12:00 AM
ADDED : நவ 11, 2011 09:54 AM
சென்னை, டி.நகரில் உள்ள தி ரெசிடென்சி டவரில் நவம்பர் 12ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த பல்கலைக் கழகங்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த பல்கலை கண்காட்சியில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்று பல்கலைளின் நிர்வாகம் பற்றியும் அவற்றில் வழங்கப்படும் பாடப்பிரவுகள் பற்றியும் விளக்க உள்ளன.
அமெரிக்காவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன்.
மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பற்றியும், சேர்க்கை முறை, படிப்புகள், தேர்வு முறை என அனைத்தையும் அறிந்து கொள்ள இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். இந்த கண்காட்சியில் மாணவ சேர்க்கை எதுவும் நடைபெறாது. ஆனால் பல்கலைக்கழகங்களின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழகங்களின் பாடப் புத்தகங்களையும் பார்வையிடலாம்.
2 மணிக்குத் துவங்கும் இந்நிகழ்ச்சியில், பார்வையாளர்களுடனான கலந்துரையாடலுடன் கூடிய பட்டப்படிப்பில் மாணவ சேர்க்கைக்கான வழிமுறைகள், விசா நடைமுறைகள், விண்ணப்பங்களின் முக்கியத்துவம் பற்றி நிபுணர்கள் விளக்க உள்ளனர்.
மேலும், ஐஇஎல்டிஎஸ் மற்றும் டிஓஇஎப்எல் தேர்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.iie.org இணையதளத்தைப் பார்க்கவும்.
