தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க ஆளில்லை

அரசு சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க ஆளில்லை

அரசு சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க ஆளில்லை


UPDATED : நவ 11, 2011 12:00 AM

ADDED : நவ 11, 2011 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2011 12:00 AM ADDED : நவ 11, 2011 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு சட்டக் கல்லூரிகளில், விரிவுரையாளர்- பிரீ-லா (பொதுப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள்) மற்றும் விரிவுரையாளர் (தனி சட்ட படிப்புகளுக்கான ஆசிரியர்கள்) பணியிடங்களில், காலியாக உள்ள 45 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

எம்.எல்., படிப்பில், 55 சதவீத மதிப்பெண் மற்றும் நெட் அல்லது ஸ்லெட் ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. மொத்தம், 178 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில், நெட் அல்லது ஸ்லெட் தகுதியை பெறாதவர்கள், எம்.எல்., படிப்பில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களை பெறாதவர்கள் என, 146 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 32 பேர் மட்டுமே, தகுதியான விண்ணப்பதாரர்களாக, தேர்வு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

19, 20ல் போட்டித் தேர்வு மொத்த பணியிடங்களை விட, தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இவர்கள் அனைவருக்கும், ஆசிரியர் பணி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. "இவர்களுக்கான போட்டித் தேர்வுகள், வரும் 19, 20 ஆகிய தேதிகளில், டி.பி.ஐ., வளாக, சம்பத் மாளிகையின் மூன்றாவது தளத்தில் உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களின் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us