தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.இ.இ.ஓ., தேர்வெழுத போட்டா போட்டி : விண்ணப்பங்கள் காலி

ஏ.இ.இ.ஓ., தேர்வெழுத போட்டா போட்டி : விண்ணப்பங்கள் காலி

ஏ.இ.இ.ஓ., தேர்வெழுத போட்டா போட்டி : விண்ணப்பங்கள் காலி


UPDATED : நவ 11, 2011 12:00 AM

ADDED : நவ 11, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2011 12:00 AM ADDED : நவ 11, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அச்சிடப்பட்ட 75 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீரும் நிலையில் இருப்பதால், கூடுதலாக 25 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

தொடக்க கல்வித்துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை, போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்டவர்கள், இத்தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்த பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால், 75 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. ஆனால், விண்ணப்பம் விற்பனை துவங்கிய ஒரு வாரத்திற்குள், பி.எட்., பட்டதாரிகள் போட்டி போட்டுக்கொண்டு, விண்ணப்பங்களை வாங்கினர்.

இதனால், அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள், ஓரிரு நாட்களில் விற்றுத் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் 19ம் தேதி வரை இருப்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனவரி 8ம் தேதி நடக்கும் போட்டித் தேர்வை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us