தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : நவ 11, 2011 12:00 AM

ADDED : நவ 11, 2011 02:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2011 12:00 AM ADDED : நவ 11, 2011 02:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வு முடிவுகளை dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in, www.pallikalvi.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்க்கலாம்.

தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: தனித்தேர்வர்கள், தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை, 17ம் தேதியில் இருந்து, 21ம் தேதி வரை, தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். தத்கல் திட்டத்தின் கீழ் தேர்வெழுதியவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், 17ம் தேதி முதல், 21ம் தேதி வரை, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும்.

டி.பி.ஐ., வளாகத்தில், விண்ணப்பம் வழங்கப்படமாட்டாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 21ம் தேதி மாலை, 5.45 மணிக்குள், விண்ணப்பம் வாங்கிய அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலைப் பொறுத்தவரை, மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு, 305 ரூபாயும் (ஒவ்வொரு பாடத்திற்கும்), இதர பாடங்களுக்கு, 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்" என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us