தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை

இந்தியாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை

இந்தியாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை


UPDATED : நவ 12, 2011 12:00 AM

ADDED : நவ 12, 2011 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2011 12:00 AM ADDED : நவ 12, 2011 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலை பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கி கெளரவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையை குறைப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மருத்தவக் கவுன்சிலும், நர்சிங் கவுன்சிலும், இந்தியாவில் எளிதாக மருத்துவக் கல்லூரி துவக்குவதற்கு வசதியாக விதிமுறைகளை தளர்த்தி உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை தரம் உயர்த்துவதற்கு ரூ.1350 கோடி நிதி உதவி வழங்க அனுமதி அளித்துள்ளோம். மருத்துவ வசதியே இல்லாத பின் தங்கிய மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு ரூ.2,030 கோடி உதவி அளிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையை குறைப்பதற்கு டெல்லியில் தேசிய மருத்துவ பணியாளர் பயிற்சி கல்லூரி, கோவை உள்பட 8 இடங்களில் மண்டல பயிற்சி கல்லூரிகள் அமைப்பதற்க 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.1,156 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us