தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை துணைவேந்தர் கவலை

வேளாண் பல்கலை துணைவேந்தர் கவலை

வேளாண் பல்கலை துணைவேந்தர் கவலை


UPDATED : நவ 13, 2011 12:00 AM

ADDED : நவ 13, 2011 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2011 12:00 AM ADDED : நவ 13, 2011 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: &'வேளாண் பல்கலை மூலம் வெளியிடப்படும், அதிக மகசூல் தரும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள், அதிகளவில் கடைப்பிடிக்காதது கவலை அளிக்கிறது&' என, பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் &'உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு, மாற்று பண்ணைய முறைகள்&' எனும் தலைப்பில், 21 நாள் பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சி, பல்கலையில் நவ., 9ல் துவங்கி, வரும் 29 வரை நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 20 வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி இப்பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை அடைவதற்கு, மாற்று பண்ணைய முறைகள் கடைப்பிடிப்பது அவசியம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.4 சதவீதம், விவசாயம் மூலம் கிடைக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 53 மில்லியன் டன் இருந்த உணவு உற்பத்தி, 2010-11ல், 241.6 மில்லியன் டன் உயர்ந்து உணவு பாதுகாப்பிற்கு வழிவகுத்துள்ளது.

பல்கலை மூலம் வெளியிடப்படும் அதிக மகசூல் தரும் புதிய தொழில்நுட்பங்களை, விவசாயிகள் அதிகளவில் கடைப்பிடிக்காதது கவலை அளிக்கிறது. தமிழக அரசு நிர்ணயித்துள்ள, 115 லட்சம் டன்கள் உணவு உற்பத்தி இலக்கினை அடைய, 19 பயிர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை தமிழக அரசுக்கு, வேளாண் பல்கலை பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us