UPDATED : நவ 15, 2011 12:00 AM
ADDED : நவ 15, 2011 10:58 AM
அ நிறம் | அளவு
தேனி : பள்ளிகளின் பணி நேரத்தை அதிகரிக்கலாமா என, ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துக் கேட்கப்படுகிறது.
சமச்சீர் கல்வி பிரச்னையில், நடப்பாண்டு, இரண்டு மாதம் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பருவமழை, உள்ளூர் திருவிழாக்கள் என, விடுமுறைகளும் விடப்பட்டன. இதனால், பள்ளிப் பணி நாட்கள் குறைந்து விட்டன.
இதை ஈடுகட்டும் வகையில், பள்ளிப் பணி நேரத்தை அதிகரிக்கலாமா, அப்படி அதிகரித்தால், பணி நேரத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல விவரங்கள், ஆசிரியர் சங்கங்களிடம் கேட்கப்பட்டுள்ளன. இக்கருத்தின் அடிப்படையில், பள்ளிப் பணி நேரம் மாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
