UPDATED : நவ 16, 2011 12:00 AM
ADDED : நவ 16, 2011 11:40 AM
தேனி: தபால் துறை சார்பில், இந்தியா போஸ்ட்-2050 என்ற ஓவியப்போட்டிகள் நவ.,16ல் நடத்தப்படுகிறது. 2050ல் இந்தியா எப்படி இருக்கும், என்பதை கற்பனையில் நிலை நிறுத்தி ஓவியமாக்குவதே போட்டி.
அந்தந்த பள்ளிகளுக்கே தபால்துறை ஊழியர்கள் சென்று போட்டிகளை நடத்துகின்றனர். இதற்கான சுற்றறிக்கைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, ஐந்து முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பிளஸ்-2 வரை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பெறுபவர்கள், மண்டல போட்டிக்கும், மண்டலத்தில் முதல் இடம் பெறுவோர் மாநில போட்டிக்கும், அதில் வெற்றி பெறுவோர் தேசிய போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவர். தேசிய போட்டியில் முதல் இடம் பெறுவோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், இரண்டாம் பரிசாக 6 ஆயிரம், மூன்றாம் பரிசு 3,000 வழங்கப்படும்.
