தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் கவுன்சிலிங்: தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையூறு?

ஆசிரியர் கவுன்சிலிங்: தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையூறு?

ஆசிரியர் கவுன்சிலிங்: தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையூறு?


UPDATED : நவ 16, 2011 12:00 AM

ADDED : நவ 16, 2011 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2011 12:00 AM ADDED : நவ 16, 2011 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையிலுள்ள அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மற்றும் தேசிய திறனாய்வுத் தேர்வு ஆகிய இரண்டும், ஒரே நாளில் நடக்க உள்ளன. இது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என தெரிகிறது.

தேர்வு: தமிழகம் முழுவதும், தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு, வரும் 20ம் தேதி நடக்கிறது. எட்டாம் வகுப்பு மாணவர்கள், இத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வு மையமான அசோக்நகர் பள்ளியில், 300க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர். காலை 9.30 முதல் 11 மணி வரை, முதல் தாள் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

கவுன்சிலிங்: பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பணியில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுபவர்களுக்கு, நவம்பர் 19, 20ம் தேதிகளில், சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவுன்சிலிங் நடக்கவுள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டது.

இடையூறு: கவுன்சிலிங்கில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசிரியர்கள், அவர்களுடன் வருபவர்கள், கவுன்சிலிங் நடத்தும் அதிகாரிகள் என, அனைவரும் வருவதால், பள்ளி வளாகம் பரபரப்பாக இருக்கும். பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பெயர்கள், ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படும். இது, தேர்வெழுதும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆசிரியர்கள் கவலைப்படுகின்றனர். தேர்வு நடக்காத பள்ளியில், ஆசிரியர் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்பது, ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு17ம் தேதி கவுன்சிலிங்: சட்டசபை இடைத்தேர்தல் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் மட்டும், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் இருந்தது. தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், திருச்சி மாவட்டத்திற்கான கவுன்சிலிங், நவம்பர் 17ம் தேதி காலை 9 மணி முதல், திருச்சி சையது மூர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us