UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சீனியர்களுக்கு, ஜூனியர் மாணவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட தகராறில், சீனியர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் காயம் அடைந்தனர்.
அரசு சட்டக்கல்லூரி படிப்பு மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள, சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி உள்ளனர். விடுதியில் ஜூனியர் மாணவர்கள், சீனியர் மாணவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் விளைவாக, கடந்த ஏப்ரல் மாதம் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
செப்., 11ம் தேதி இரவு சீனியர், ஜூனியர் மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், சீனியர் மாணவர்கள் எழில் (25), இளங்கோ (24), ஆனந்தராஜ் (25) ஆகிய மூன்று பேரும் பலத்த காயம் அடைந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.