UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இது படிக்கும் காலத்தில் மனதை லேசாக உறுத்திக் கொண்டே இருக்கும். தந்தை இதை வாங்கித் தர வில்லையே, தாய் இதை செய்ய வில்லையே அதை செய்யவில்லையே என்று குறைபடுவார்கள்.
மாணவப் பருவத்தில் நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்களை நமக்கு சாதகமாக வேண்டும் என்று எண்ணத்தில் பெற்றோர்களிடம் கேட்பார்கள். எல்லா பெற்றோருக்கும் குழந்தைகள் நினைக்கும் அனைத்தையும் செய்து தரும் நிலைமை இருக்குமா என்பது தெரியவில்லை.
எது அத்தியாவசியம்... எது ஆசை... என்பதில் மாணவர்கள் தீர்க்கமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர்களால் இது வாங்கித் தரக்கூடியதுதானா என்பதை யோசிக்க வேண்டும். மாணவப் பருவத்துக்கு எது முக்கியம் என்பதை அறிந்திருக்கவேண்டும். விலை உயர்ந்த மொபைல் போனைவிட, பாடப்புத்தகள்தான் மதிப்பானவை என்ற எண்ணம் வளர வேண்டும்.
பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கியிருக்கும் மொபைல் வைத்திருந்தால் மதிப்பு. அது இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை இகழ்வாக நினைப்பார்கள் என்று நாமாக கருதிக் கொள்ளக்கூடாது.
நன்றாக படிப்பதன் மூலம்... நல்ல நிலைக்கு உயர முடியும். சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும். அப்போது நாம் நினைத்தை வாங்கிக் கொள்ள முடியும் என்ற உறுதிப்பாடு வேண்டும்.
படிப்புக்கு தேவையானதை வாங்கித் தரும்படி கேட்பதில் தவறில்லை. பிள்ளை கேட்டால் அது அத்தியாவசியமான பொருளாகத்தான் இருக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கும்படி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.