பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரத் துடிக்கும் மாணவர்கள்
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரத் துடிக்கும் மாணவர்கள்
UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கவுகாத்தியில் கஹிலிபாரா பகுதியில் அமைந்துள்ளது ஜோதி சித்ராபன் பிலிம் ஸ்டுடியோ சொசைட்டி. இது சித்ராபன் பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் பல திரைத் துறைப் படிப்புகளை நடத்தி வருகிறது.
3 ஆண்டு படிக்கக்கூடிய ஆடியோகிராபி, பிலிம் அண்ட் வீடியோ எடிட்டிங், மோஷன் பிக்சர், ஆடியோகிராபி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும் ஒரு ஆண்டு படிக்கக்கூடிய அப்ளைட் ஆக்டிங் (திரைப்படம் மற்றும் ‘டிவி’) என்ற சான்றிதழ் படிப்புகளும் இங்கு உள்ளது.
தற்போதைய மீடியா சூழலில் ‘டிவி’ மற்றும் திரைத் துறைப் படிப்புகளை முடிப்பவருக்கான வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால் இந்தத் திரைத் துறை பயிற்சி நிறுவனத்தின் படிப்புகளுக்கு கிராக்கி இருப்பதில் ஆச்சரியமில்லை.
சமீபத்தில் இந்த நிறுவனம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் வாயிலாக இந்த கல்வி நிறுவனத்தில் படித்து முடித்தவர்கள் படிப்பு முடிந்தவுடனேயே தூர்தர்ஷனில் பணி புரியும் வாய்ப்புகளும் இப்போது கிடைக்கின்றன.
இந்த பிலிம் இன்ஸ்டிடியூட் நடத்தும் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. காரணம் பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கான கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் வந்த வண்ணம் இருந்தன.
நுழைவுத் தேர்வு வாயிலாக இதற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். உறுதியாகக் கிடைக்கும் வாய்ப்புகளின் காரணமாக இதன் படிப்புகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் போலவே இந்த இன்ஸ்டிடியூட்டையும் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.