தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை., மண்டல ஹாக்கி சென்னை அணிக்கு கோப்பை

பல்கலை., மண்டல ஹாக்கி சென்னை அணிக்கு கோப்பை

பல்கலை., மண்டல ஹாக்கி சென்னை அணிக்கு கோப்பை


UPDATED : செப் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை புனித ஜோசப் கல்லூரி அணி முதலிடம் பிடித்து பரிசுக் கோப்பையை வென்றது.
காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகளுக்கான ஹாக்கி போட்டி நடந்தது. சென்னை, சேலம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலியை சேர்ந்த 15 கல்லூரி அணிகள் பங்கேற்றன. துணை முதல்வர் வி.சேகரன் போட்டியை துவக்கினார். சாம்பியன் பிரிவு, கூட்டுக்குழு பிரிவு என இரு பிரிவாக போட்டிகள் நடந்தது.
சென்னை அணி முதலிடம்: இறுதி போட்டியில் சாம்பியன் பிரிவில் சென்னை புனித ஜோசப் கல்லூரி அணியும், கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அணியும் மோதின.
இதில் 2:1 கோல் அடித்து சென்னை புனித ஜோசப் கல்லூரி முதல் பரிசு பெற்றது. இரண்டாம் பரிசை கிண்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியும், மூன்றாம் பரிசை காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியும் வென்றன.
கூட்டுக்குழு பிரிவில் 4:3 என்ற கோல் கணக்கில் கோவை 7 வது மண்டல அணி முதல் பரிசும், மதுரை 9 வது மண்டல அணி 2ம் பரிசும், சென்னை 3 வது மண்டல அணி 3ம் பரிசுகளையும் வென்றன.
பரிசளிப்பு விழா: அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராஜன் வெற்றி பெற்ற அணிக்கு அண்ணா பல்கலை.,கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ஜி.விஸ்வலிங்கம் வரவேற்றார். அண்ணா பல்கலை., உடற்கல்வி இயக்குனர் பாலகணேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us