தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஆன்-லைன்’ தேர்வு எழுதிய வேளாண் பல்கலைக்கழக மாணவியர்

‘ஆன்-லைன்’ தேர்வு எழுதிய வேளாண் பல்கலைக்கழக மாணவியர்

‘ஆன்-லைன்’ தேர்வு எழுதிய வேளாண் பல்கலைக்கழக மாணவியர்


UPDATED : செப் 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அனைத்து மாணவ, மாணவியரும் ஆன்-லைன் முறையில் தேர்வெழுத திட்டம் தயாரிக்கப்பட்டு, ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதல்கட்டமாக, கடந்தாண்டு, வேளாண் பல்கலையில் சேரும் அனைத்து மாணவ, மாணவியரும் கட்டாயம், ‘லேப்-டாப்’ வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், லேப்-டாப் வாங்க, மாணவர்களுக்கு வங்கி கடனுதவிக்கான ஏற்பாட்டையும் பல்கலை நிர்வாகம் செய்து கொடுத்தது.
பல்கலையின் மெயின் பில்டிங், அனைத்து விடுதிகள் மற்றும் தேர்வறை ஆகிய பகுதிகளில் மட்டும், ‘வை-பை’ என்ற, கம்பியில்லா அகண்ட அலைவரிசை முறை நிறுவப்பட்டது. இதன் மூலம், பல்கலையின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து, இணைய தளத்தை இயக்க முடியும். தேர்வறையில் இருந்து ஆன்-லைனில் தேர்வெழுதவும் முடியும்.
பல்கலையில் ஒரே நேரத்தில் 350 பேர் அமரக் கூடிய அளவுக்கு, தேர்வறை அமைக்கப்பட்டு, சில மாதங்களாக ஆன்-லைன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பல்கலை நடத்தும் பருவத் தேர்வும், ஆன்-லைன் முறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வறைக்கு மாணவர்கள், பேனா, பென்சில், பேப்பர் எதுவும் எடுத்துச் செல்ல வேண்டியது இல்லை. லேப்-டாப் கம்ப்யூட்டரை மட்டும் கொண்டு சென்றால் போதும்.
மாணவர்களுக்கு என, தனி ‘ஐடி’ நம்பர் வழங்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் போது ஒரு ரகசிய குறியீடு வழங்கப்படும். இந்த இரண்டையும் டைப் செய்தபின், லேப்-டாப் மானிட்டரில் வினாத்தாளைப் பார்க்க முடியும். தேர்வு நடக்கும்போது, எந்த இணைய தளத்தையும் ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டரில் பார்க்க முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us