மதுரை காமராஜ் பல்கலையின் அனைத்து படிப்புகளுக்கும் அங்கீகாரம்
மதுரை காமராஜ் பல்கலையின் அனைத்து படிப்புகளுக்கும் அங்கீகாரம்
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைகல்வி இயக்ககத்தின் பணிகள் குறித்து டில்லி தொலைநிலைக்கல்வி கவுன்சில் நேரில் ஆய்வு செய்தது.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் லதாபிள்ளை தலைமையிலான ஆய்வுக்குழு ஆய்வு அறிக்கையை தொலை கல்விக்குழுவிடம் அளித்தது.
இதன் அடிப்படையில், மதுரை காமராஜ் பல்கலை., தொலைகல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் அனைத்து படிப்புகளுக்கும் தொலைநிலைக் கல்விக்குழு தனது அங்கீகாரத்தை வழங்கியது.
இதனால் இப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகளில் சேருவதற்கு தகுதி உடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தொலைகல்வி இயக்கக இயக்குனர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
