தேர்வுகளில் வினா குளறுபடியை நீக்க தேர்வு மதிப்பீட்டுத் துறை
தேர்வுகளில் வினா குளறுபடியை நீக்க தேர்வு மதிப்பீட்டுத் துறை
UPDATED : ஜன 24, 2012 12:00 AM
ADDED : ஜன 24, 2012 12:40 PM
மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலம் சார்பில் மேல்நிலைப் பள்ளி மொழிப் பாடங்கள் மதிப்பீடு கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதுள்ள மொழிப் பாடங்கள், மாணவர்களின் திறனை மேம்படுத்துதாக அமையவில்லை. கற்றல், கற்பித்தல், மதிப்பீடு ஆகியன கல்வியில் முக்கியம். இதில் கற்றல், கற்பித்தலுக்கு தரப்படும் முக்கியத்துவம் மதிப்பீட்டுக்குக் கொடுப்பதில்லை. இதனால் தான் பாடத்திட்டங்கள் தேர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டு, தேர்வுகளில் வினாக்கள் கேட்பதிலும் குளறுபடி ஏற்படுகிறது.
பாடத்திட்டத்தில் ஏற்படும் குளறுபடி, மாணவர்களின் தேர்ச்சியிலும் எதிரொலிக்கும். எனவே, தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மொழிப் பாடங்கள் முறையாக அமையத் தேவையான வரையறைகள், இந்திய தேசிய தேர்வுப் பணிகள் குழுவால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, புதிதாக தேர்வு மதிப்பீட்டுத் துறை என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டு அவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இயக்குனர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ஆதித்தன், ஒருங்கிணைப்பாளர் சாரதாம்மாள் பேசினர். துறை ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
