தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சொந்த வேலைகளுக்கு மாணவிகளை ஏவும் ஆசிரியைகள்

சொந்த வேலைகளுக்கு மாணவிகளை ஏவும் ஆசிரியைகள்

சொந்த வேலைகளுக்கு மாணவிகளை ஏவும் ஆசிரியைகள்


UPDATED : ஜன 28, 2012 12:00 AM

ADDED : ஜன 28, 2012 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2012 12:00 AM ADDED : ஜன 28, 2012 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் டீக்கடையில் டீ, வடை வாங்கி வர வகுப்பு நேரத்தில் மாணவிகள் அனுப்பப்படுவதால் படிப்பு பாதிக்கப்படுவதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை 2 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். 7, 8, 9 ம் வகுப்பு மாணவிகள் பள்ளி நேரத்தில், ஆசிரியைகளின் சோம்பலை போக்கவும், மதிய சாப்பாட்டிற்கு வடை போன்ற பலகாரங்களை வாங்கவும் மாணவிகளை டீக்கடைகளுக்கு அனுப்புகின்றனர்.

பள்ளி எதிரே உள்ள வங்கிகளில் தமது பாஸ் புக்கில் வரவு வைத்து வாங்கி வருமாறும் மாணவிகளை அனுப்புகின்றனர். தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஆசிரியைகள், மாணவிகளை ஏவி விடுவதால், வகுப்பை விட்டு செல்லும் மாணவிகள் கவனம் திசை மாறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us