தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்


UPDATED : ஜன 29, 2012 12:00 AM

ADDED : ஜன 29, 2012 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2012 12:00 AM ADDED : ஜன 29, 2012 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அரசு பிற்பட்டோர் நல விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது.

பிரான்மலையில் வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் 95 பேர் இங்குள்ள அரசு பிற்படுத்தபட்டோர் நலவிடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள், ஜனவரி 28ம் தேதி காலை உணவாக இட்லி, சாம்பார் சாப்பிட்டுள்ளனர். சிறிதுநேரத்தில் சில மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

தலைமை ஆசிரியர் கருப்பசாமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். டாக்டர் ஜெயக்கண்ணன் தலைமையில் மருத்துவக்குழு அனைத்து மாணவிகளையும் பரிசோதனை செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் 13 பேருக்கு சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உணவில் பல்லி விழுந்ததால் வாந்தி ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us