ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க கோர்ட் உத்தரவு
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க கோர்ட் உத்தரவு
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘நடுநிலைப்பள்ளியில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சீனியாரிட்டி நிர்ணயம் தொடர்பாக, அளித்த மனுவை நான்கு மாதங்களில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரேய்மெண்ட் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் உறுப்பினர்கள் தற்காலிக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின், பணி வரன்முறை செய்யப்பட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சீனியாரிட்டி இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அளித்த மனுவை பரிசீலித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சேகர், அரசு தரப்பில் வக்கீல் ரவிகுமார் ஆஜராகினர். ‘மனுதாரர் மற்றும் இருவர் அளித்த மனுக்களை சட்டப்படி பரிசீலித்து, நான்கு மாதங்களில் தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.
