உயிர் அறிவியல் மையம் டிசம்பரில் நாட்டிற்கு ஒப்படைப்பு
உயிர் அறிவியல் மையம் டிசம்பரில் நாட்டிற்கு ஒப்படைப்பு
UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) உயிர் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் வரும் அக்., 15ம் தேதி முதல் செயல்படவுள்ளது.
டி.ஆர்.டி.ஓ.,விற்கு நாடு முழுவதும் 64 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி போல், பாரதியார் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கூட ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.
இந்த உயிர் அறிவியல் மையத்தை வரும் டிசம்பரில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்து நாட்டிற்கு ஒப்படைக்கிறார். அவர், டிசம்பர் மாதம் எந்த நாளில் திறந்து வைக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
