பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
UPDATED : அக் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா செப்., 30ம் தேதி நடந்தது.
இதில், அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலை துணைவேந்தர் ஜெய் ரூப் சிங், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
அவர் பேசுகையில், “சவாலான நேரம் இது; சவாலை எதிர்கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். இன்றைய மருத்துவ முறையில், நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி கிடைப்பது இல்லை. இவர்களுக்கு இந்த இரு வசதிகளும் கிடைத்தால், நோய் பாதிப்பு அதிகம் இருக்காது,” என்றார். இந்த விழாவில், கல்லூரி முதல்வர் ராமலிங்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
