தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ‘இளம் அறிஞர்கள்’ போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ‘இளம் அறிஞர்கள்’ போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ‘இளம் அறிஞர்கள்’ போட்டி


UPDATED : அக் 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள், இந்தத் திட்டத்திற்கான போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் ஜோசப் கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கியின் பணிகள், அதன் பங்கு, இந்திய வங்கிகள் ஆகியவற்றை மையப்படுத்தி, ஆங்கிலத்திலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் நாடு தழுவிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படும். அதில் இருந்து 150 இளம் அறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில், இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரை திட்டப் பணியாற்றுவர். அப்போது உதவித்தொகையாக மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும். பல்கலைக்கழகங்களில், தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இணையதள வழியாகவோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். ஜனவரி 11ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, மார்ச் மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும்.
இதற்கு, வரும் 24ம் தேதிக்குள், ‘வங்கியியல் பணியாளர் தேர்வு மையம், ஐ.பி.பி.எஸ்., இல்லம், தபால் பெட்டி எண் 8587, மும்பை-400 101’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரம் அறிய விரும்புவோர் www.rbi.org.in/youngscholar என்ற இணையதளத்தை பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் இளம் அறிஞர்கள், ரிசர்வ் வங்கியில் பணி நியமனம் பெற எந்த உரிமையும், சலுகையும் கேட்க முடியாது. இவ்வாறு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us