UPDATED : அக் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க இந்திய அரசு 100 பேருக்கு ஸ்காலர்ஷிப் தரும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு 400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான விண்ணப்பங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து தான் வந்துள்ளன.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 87 பேர் ஓமான் நாட்டிலிருந்தும், 76 பேர் குவைத்திலிருந்தும், 60 பேர் சவுதி அரேபியாவிலிருந்தும், 31 பேர் யு.ஏ.இ.,யிலிருந்தும், 27 பேர் பக்ரைனிலிருந்தும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 9 என நிர்ணயிக்கப்பட்டது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 40 நாடுகளில் இதற்கான போட்டித்தேர்வு அக்டோபர் 26 அன்று நடத்தப்படும்.
இந்த ஸ்காலர்ஷிப் குறித்த அனைத்து முறைகளும் நவம்பருக்குள் முடித்துவிட அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் படிப்பில் சேர முடியும் என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
