தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டுக்கு ஒரு லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் அண்ணா பல்கலை

ஆண்டுக்கு ஒரு லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் அண்ணா பல்கலை

ஆண்டுக்கு ஒரு லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் அண்ணா பல்கலை


UPDATED : அக் 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங் ஆகிய நான்கு முக்கிய கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
சில ஆண்டுகள் ‘பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் செயல்பட்டது. பின்னர் 1982ம் ஆண்டு ‘அண்ணா பல்கலைக்கழகம்‘ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்பட்டன. ஆறு அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளும் இதில் அடக்கம்.
இந்திய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரப்பட்டியல்களில் தவறாமல் இடம் பிடித்துவிடும் முன்னணி கல்வி நிறுவனமாக இந்த பல்கலைக்கழகம் திகழ்கிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகளை இந்த பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. இது இந்தியாவின் மற்ற எந்த கல்வி நிறுவனங்களை விடவும் அதிகம். இதனால் தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக இது உள்ளது.
தனியாக ‘டிவி’ சேனல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கியுள்ள ‘இஸ்ரோ’ அமைப்பு அதற்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளது. நிர்வாக வசதிகளுக்காக கடந்த 2007ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம், கோவை அண்ணா பல்கலைக்கழகம் என இந்த பல்கலைக்கழகம் மூன்றாக பிரிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் கவர்னர் மாளிகையான ‘ராஜ் பவன்’ அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாவது வளாகம் குரோம்பட்டையிலும், மூன்றாவது வளாகம் சென்னை தரமணியிலும் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்:
- கெமிக்கல் இன்ஜினியரிங்
- டெக்ஸ்டைல் டெக்னாலஜி
- லெதர் டெக்னாலஜி
- பயோடெக்னாலஜி
- சி.இ.சி.ஆர்.ஐ.,
- ரப்பர் அண்டு பிளாஸ்டிக் டெக்னாலஜி
- செராமிக் டெக்னாலஜி
- சிவில் இன்ஜினியரிங்
- ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங் டிவிஷன்
- என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
- வாட்டர் ரிசோர்சஸ்
- அர்பன் சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட்
- ஓஷன் மேனேஜ்மென்ட்
- ரிமோட் சென்சிங்
- சாயில் மெக்கானிக்ஸ் அண்டு பவுன்டேஷன் மேனேஜ்மென்ட்
- டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்
- டிசாஸ்டர் மிட்டிகேஷன் அண்டு மேனேஜ்மென்ட்
- பில்டிங் டெக்னாலஜி சென்டர்
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- பிரின்டிங் டெக்னாலஜி
- மேனுபக்சரிங் இன்ஜினியரிங்
- எனர்ஜி ஸ்டடீஸ்
- மைனிங் இன்ஜினியரிங்
- மேனுபக்சரிங் சிஸ்டம் மேனேஜ்மென்ட்
- இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்
- ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
- ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
- புரடக்ஷன் டெக்னாலஜி
- எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
- பவர் சிஸ்டம் இன்ஜினியரிங்
- ஹை வோல்டேஜ் இன்ஜினியரிங்
- எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
- எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்
- எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
- கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்
- இன்பர்மேஷன் டெக்னாலஜி
- மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
- ராமனுஜன் கம்ப்யூட்டிங் சென்டர்
- மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்
- சோஷியல் சயின்ஸ் அண்டு ஹியூமானிட்டீஸ்
- ஜியாலஜி
- மெடிக்கல் சயின்சஸ்
- ஆர்க்கிடெக்சர்
- பிளானிங்
பிரபல எழுத்தாளர்கள் சுஜாதா, கிரேசி மோகன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், வெங்கட்ராகவன் ஆகியோர் இந்த
பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us