தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு இறுதிக்கெடு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு இறுதிக்கெடு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு இறுதிக்கெடு


UPDATED : அக் 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்குள் நிரந்தர கட்டடங்களுக்கு மாற வேண்டும். இல்லையென்றால், அடுத்த கல்வியாண்டில் பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும்’ என்று என்.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 750 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
கடந்த 2004-05ல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலில் (என்.சி.டி.இ.,) அங்கீகாரம் பெற்று, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் இந்தப் பள்ளிகள், மூன்று ஆண்டுகளில் நிரந்தர கட்டடங்களுக்கு மாற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
என்.சி.டி.இ., விதித்த கெடு நடப்பு கல்வியாண்டுடன் முடிகிறது. எனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கீகாரம் பெற்று, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தர கட்டடங்களுக்கு மாறியாக வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நிர்வாகங்கள் எடுக்காவிட்டால், அடுத்த கல்வியாண்டில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பயிற்சிக் கல்வி இயக்குனர் வசுந்தரா தேவி கூறுகையில்,“என்.சி.டி.இ., விதித்துள்ள கெடுவை பள்ளி நிர்வாகங்கள் பூர்த்திச் செய்கிறதா, இல்லையா என்பதை கவனிப்போம். நிரந்தர கட்டடங்களுக்கு பள்ளிகள் மாற முயற்சி எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்வோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us