தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு பொது நடைமுறை விரைவில் அறிமுகம்

பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு பொது நடைமுறை விரைவில் அறிமுகம்

பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு பொது நடைமுறை விரைவில் அறிமுகம்


UPDATED : அக் 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
அரசு கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி., எனப்படும் ஆசிரியர் தேர்வாணையம் இருப்பது போல, விரைவில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான விரிவுரையாளர் பணிக்காக பொதுவான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அரசு யோசித்து வருவதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான்-டீச்சிங் ஸ்டாப் எனப்படும் ஆசிரியரல்லாத ஊழியர்களும் இந்த முறையிலேயே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதுபோன்ற பொது சேர்க்கை முறை எந்த குளறுபடிகளும் இல்லாததாக அமையும் என்றும் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் சரியாக பின்பற்றப்படுவது இதனால் உறுதிப்படுத்தப்படும் என்றும் அரசு கருதுகிறது.
திறனுள்ள ஒருவர் பல இடங்களுக்கும் சென்று அலைவது இதனால் தவிர்க்கப்படும் என்று சில துணைவேந்தர்கள் கருதுகிறார்கள். எனினும் பல்கலைக்கழகங்கள் தங்களுக்குத் தேவைப்படும் பிரத்யேக திறன்களை அடையாளம் காணுவது இதனால் பாதிக்கப்படும் என்றும் சில கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us